நான் சொல்வது சரிதானே!! ?

ஞாயிறு, 15 மே, 2011

சிதைந்த விண்டோஸ்சை சீர் படுத்த

விண்டோஸ் இயக்க அமைப்பில் சில நேரங்கள் மெனுக்கள், டாஸ்க் மேனேஸர், கன்ரோல் பேனல், செக் பாக்ஸ்கள், பட்டன்கள் ஆகியவை கிளிக் செய்ய முடியாதபடி செயல்படாத நிலையில் (disabled) மறைந்து போயிருக்கும். அவற்றை கிளிக் செய்தாலும் எந்த வேலையு்ம் நடக்காது. இவற்றையெல்லாம் தெரியச் செய்வதற்காக தயாரிக்கப்பட்ட கருவிதான் விண்டோஸ் எனேபிளர்.  இதை இயக்கிவிட்டு, disabled ஆக உள்ள பட்டன்கள், செக் பாக்ஸ்கள், மெனுக்களில் கிளிக் செய்தால் அவை இயங்கும். 

இதை நிறுவத்தேவை இல்லை அப்படியே இயக்கலாம்.

சனி, 14 மே, 2011

எப்போதும் கணினி வேகமாக இயங்க


பொதுவாக கணினி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக கணணி இயங்கும்.
ஆனால் நாளடைவில் வயோதிகனை போல் மெதுவாக இயங்கி நம்மை சோதிக்கும். சிலரது கணினி பூட் ஆவதற்குள் மிகுந்த நேரத்தை எடுத்துக் கொள்ளும். சிலரது கணணி SHUT DOWN ஆவதற்கு மணிக்கணக்கில் நேரம் எடுத்துக் கொள்ளும்.

இதுபோல இல்லாமல் நாம் கணினியை வாங்கிய பொழுது என்ன வேகத்தில் இயங்கியதோ அதே வேகத்தில் தொடர்ந்து இயங்க ஒரு மென்பொருள் உள்ளது. WIN ASO REGISTRY OPTIMIZER என்னும் மென்பொருளில் உங்கள் கணினியை வேகமாகவும் பிழையின்றியும் செயல்பட வைக்க பல்வேறு கருவிகள் உள்ளன

.

மிகவும் மெதுவாக இயங்கும் ஒரு பழைய கணினியில் இதை நிறுவினால் நிறைய வித்தியாசத்தை உணரலாம். இந்த மென்பொருளின் சோதனை பதிப்பு தான் இலவசமாக கிடைக்கிறது.

FULL VERSION தேவைப்படுபவர்கள் அதற்குரிய வழிகளில் பெற்றுக் கொள்ளலாம். இந்த மென்பொருளை ஒரு முறை பயன்படுத்தியவர்கள் கண்டிப்பாக நிரந்தரமாக வைத்துக் கொள்வார்கள்.