நான் சொல்வது சரிதானே!! ?

வெள்ளி, 10 ஜூன், 2011

ஐக்கான் அம்புக்குறியை மறைக்க

பல மென்பொருள்கள் நிறுவப்படும்போது அவைக்குரிய சார்ட்கட்கள் டெஸ்க்டாப்பில் சேர்க்கப்படுகின்றன. இந்த ஐக்கான் களை Shortcut Icon என அடையாள படுத்துவதற்க்காக இடது பக்க கீழ் மூலயில் ஓர் அம்புக்குறி இடப்படுகின்றன. Icon களில் உள்ள அம்புக்குறிகளை மாத்திரம் நீக்கும்போது திரை அழகாக தென்படும். விரும்பியவர்கள் நீக்கிக்கொள்ளலாம். ரெஜிஸ்ரியில் மாற்றம் செய்வதனூடாகவே இதை செய்ய முடியும்.

மாற்றம் செய்வதற்க்குமுன் Inkfile என்கிற Key யை export பண்ணி சேமித்துக்கொள்ளவேண்டும். அதன் பின்

Start -->Run--> Regedit> HKEY_CLASSES_ROOT என்பதன் இடது பக்கம் உள்ள + அடையாளத்தை கிளிக்பண்ணி விரிக்கவும்- கீழ்நோக்கி போய் LNKFILE என்னும் போடரை ஒருமுறை கிளிக்பண்ணவும் அடுத்து வலது பக்கம் IsShortcut என்று காணப்படும் Value ஐ கிளிக்பண்ணி அழித்து விடவும். கம்பியூட்டரை ரீஸ்டார்ட் பண்ணவும்.

அம்புக்குறி மறைந்திருப்பதை காணலாம்